பாதுகாப்பு படையினரின் அதிரடியில் பாகிஸ்தானில் 9 தீவிரவாதிகள் பலி
பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சியில், கேமாரி பகுதியில் நேற்று பாதுகாப்பு படையினருக்கும், தலீபான் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் நடந்தது. இந்த மோதலில் பாகிஸ்தான் தலீபான் தீவிரவாத அமைப்பின் கராச்சி பிரிவு தலைவர் உள்பட 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தீவிரவாதிகள், கடந்த ஆண்டு, ரேஞ்சர்ஸ் செக்டார் கமாண்டர் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் தொடர்புடையவர்கள் ஆவார்கள்.
இதேபோன்று கராச்சியில், சோராப் கோத் பகுதியில் ஒரு வீட்டில் தலீபான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு நேற்று பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த தலீபான் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதில் கொல்லப்பட்டவர்களில் ஒருவரான காரி ஜூபைர், வெடிகுண்டு நிபுணர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
காமேரியில் நடந்த சண்டையில் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் காயம் அடைந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply