தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு எதிராக பாராளுமன்ற வளாகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்
தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்கள ராவய அமைப்பினர் பாராளுமன்ற வளாகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.‘தமிழில் தேசிய கீதத்தை பாடுவது இனவாதத்தை தூண்டும் செயலாகும்’. ‘தேசிய கீதத்தில் கை வைப்பதை தடை செய்வோம்’ என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. புதிய அரசாங்கத்தில் நேர்மையான ஆட்சி இல்லை. முதுகெலும்பு இல்லாதவர்களே நாட்டை ஆட்சி செய்கின்றனர். இந்த நிலை மேலும் தொடர்ந்தால், நாட்டை விட்டுக் கொடுக்கும் நிலை ஏற்படும்’ என சிங்கள ராவய அமைப்பின் தலைவர் ஹக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்திலிருந்து செத்சிரிபாய நோக்கி பேரணியாக செல்ல முற்பட்டனர். அதன்போது பாணந்துறை சந்தியுடன் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். அத்துடன் ஜனாதிபதியுடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த பொலிஸார், ஆர்ப்பாட்டக்காரர்களை மீண்டும் பாராளுமன்றம் நோக்கி அனுப்பியுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீண்டும் பாராளுமன்றத்தை வந்தடைந்ததையடுத்து அங்கு கருத்து தெரிவித்த தேரர், ‘பேச்சுவார்த்தையின் போது சுமூக தீர்வு கிட்டாவிடின் மீண்டும் 28ஆம் திகதி போராட்டம் வெடிக்கும்’ எனக் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply