தேசிய அரசாங்கம் உருவாகிய பின்னரே வடமாகாணத்திற்கு விடுதலை கிடைத்தது : அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல

தேசிய அர­சாங்­கத்தின் உத­யத்­து­ட­னேயே வட மாகா­ணத்­திற்கு விடு­தலை கிடைத்­துள்­ளது. அதை மறந்து வட­மா­காண முத­ல­மைச்சர் சர்­வ­தே­சத்­திடம் வசை பாடிக்­கொண்­டி­ருக்­கின்றார் என அர­சாங்கம் குற்றம் சுமத்­தி­யுள்­ளது. தமிழ் மக்­களை அங்­கீ­க­ரித்து உரி­மை­களை வழங்­கி­யது நாம் என்­பதை தமிழ் தலை­மைகள் மறந்து விட வேண்டாம் எனவும் அரசு தெரி­விக்­கி­றது.வட மாகா­ணத்­தினை கட்­டுப்­ப­டுத்தும் வகையில் அர­சாங்கம் செயற்­ப­டு­வ­தாக வட­மா­காண முத­ல­மைச்சர் ஐ.நா. பிரதி நிதி­க­ளிடம் தெரி­வித்­துள்ள நிலையில் அர­சாங்­கத்தின் கருத்­தினை வின­விய போதே அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் குறிப்­பிட்­ட­தா­வது,

விடு­தலைப் புலி­க­ளு­ட­னான யுத்தம் முடி­வ­டைந்­த­வுடன் வட­மா­காணம் விடு­த­லை­ய­டை­யாது கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக மக்கள் இரா­ணு­வத்தின் பிடியில் சிக்கிக் கிடந்­தனர். வடக்கு மக்­களின் நிலங்கள் அப­க­ரிக்­கப்­பட்டும் சொத்­துக்கள் பறிக்­கப்­பட்டும் அம் மக்­களை அடி­மை­க­ளாக நடத்­தி­யமை தொடர்பில் தமிழ் தலை­வர்­களே கடந்த காலத்தில் குரல் எழுப்பி வந்­தனர். இந்­நி­லை­யி­லேயே கடந்த ஜன­வரி 8 ஆம் திகதி ஜனா­தி­பதி தேர்­த­லுடன் வடக்கு விடு­த­லை­ய­டைந்­தது. இம்­முறைத் தேர்­தலில் வடக்கு வாழ் தமிழ் மக்கள் தமது முழு­மை­யான ஆத­ர­வி­னை எமக்கு கொடுத்­த­மையும் எமது வெற்­றிக்கு உத­வி­ய­மையும் வடக்கு மக்­களின் ஆதங்­கத்­தினை முழு­மை­யாக விளங்கிக் கொள்ள முடிந்­தது.

அதேபோல் எமது அர­சாங்கம் உத­ய­மான பின்­னரே வடக்கில் இத்­தனை ஆண்­டு­க­ளாக அப­க­ரிப்பில் இருந்து தமிழ் மக்­களின் காணிகள் விடு­விக்­கப்­பட்டு தமிழ் மக்­க­ளி­டையே ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. இரா­ணுவ முகாம்­களில் இருந்து பொது­மக்­களின் காணி­களை அவர்­க­ளி­ட­மேயே ஒப்­ப­டைத்­தி­ருக்­கின்றோம்.அது மட்டும் இன்றி நிவா­ர­ணங்கள் அனைத்தும் தமிழ் பேசும் வடக்கு மக்­க­ளையும் உள்­ள­டக்­கியே மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply