பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 20 அப்பாவி தொழிலாளர்கள் பலி
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 20 அப்பாவி தொழிலாளர்கள் பலியானார்கள். பலுசிஸ்தான் மாகாணம், டர்பத் பஜார் அருகே உள்ள கோக்டான் பகுதியில் பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் நேற்றிரவு தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த தீவிரவாதிகள் தொழிலாளர்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் 20 பேர் பலியானதாக அம்மாகாண முதல் மந்திரி அப்துல் மாலிக் கூறியுள்ளார். இக்கொடூர சம்பவத்தில் பலியான தொழிலாளர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என மாலிக் கூறினார்.பலியானவர்கள் அனைவரும் சிந்து மாகாணத்தை சேர்ந்தவர்கள் என டர்பத் மாவட்ட காவல் அதிகாரி இம்ரான் குரேஷி தெரிவித்துள்ளார். கடந்த பல வருடங்களாகவே பலுசிஸ்தான் பகுதியில் தொழிலாளர்கள் கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் சக்ரான் பகுதியில் 8 தொழிலாளர்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply