அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாளை வெளியிடுகிறார் ஹிலாரி கிளிண்டன்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஹிலாரி கிளிண்டன் நாளை வெளியிடுகிறார். சமூக வலைதளங்களில் ஹிலாரி போட்டியிடுவது குறித்த அறிவிப்பு வீடியோ வடிவில் நாளை வெளியாகிறது. 2016 ஆம் ஆண்டு நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிட வேண்டும் என உலகின் மிகப்பெரிய தொழிலதிபரான வாரன் பப்பட் சில மாதங்களுக்கு முன் கேட்டுக்கொண்டார். அப்போதிலிருந்து அதிபர் தேர்தலில் ஹிலாரி நிச்சயம் போட்டியிடுவார் என கூறப்பட்டது. அதற்கேற்றவாறு தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்னேற்பாடுகளை ஹிலாரி செய்து வந்தார். கடந்த வாரத்தில் கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப வல்லுநரை தனது தொழில்நுட்ப பணியளாராக ஹிலாரி ஒப்பந்தம் செய்தார்.

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான அறிவிப்பு வெளியான பின், முதற்கட்டமாக யோவா மற்றும் நியூ ஹேம்ப்ஷையர் மாகாணங்களில் ஹிலாரி பிரச்சாரம் செய்ய உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். 24 வருடங்களுக்கு முன் அந்நாட்டின் முதல் பெண்மணியான இருந்த ஹிலாரி முதல் பெண் அதிபராவார் என்று இப்போதே ஹேஸ்யங்கள் நிலவுகின்றன. ஹிலாரியின் ஆலோசனையாளராக செயல்படப்போவதாக முன்னாள் அதிபர் கிளிண்டன் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

மறுபுறம் குடியரசுக்கட்சி சார்பில் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் சகோதரர் ஜெப் புஷ் போட்டியிடுவார் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply