பாகிஸ்தானில் ஒரே நாளில் 17 பேருக்கு தூக்கு
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி, பெஷாவர் ராணுவ பள்ளிக்கூடத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 132 குழந்தைகள் உள்பட 145 பேரை கொன்று குவித்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து, அங்கு மரண தண்டனை கைதிகளின் தண்டனையை நிறைவேற்ற பிறப்பிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் பாகிஸ்தானில் உள்ள பல்வேறு சிறைகளில் 17 மரண தண்டனை கைதிகளின் தண்டனை நிறைவேற்றப்பட்டது. குஜ்ரன்வாலா மத்திய சிறையில் 3 பேர், பைசலாபாத்தில் 2 பேர், சியால்கோட்டில் 2 பேர், முல்தானில் ஒருவர், குஜராத்தில் ஒருவர், லாகூரில் 2 பேர், ராவல்பிண்டி அடியலாவில் 3 பேர், குயெட்டாவில் ஒருவர் உள்பட 17 பேர் நேற்று காலையில் தூக்கில் போடப்பட்டனர்.
மரண தண்டனையை நிறைவேற்ற விதிக்கப்பட்டிருந்த தடை அகற்றப்பட்ட பின்னர், பாகிஸ்தானில் ஒரே நாளில் 17 மரண தண்டனை கைதிகள் தூக்கில் போடப்பட்டது இதுவே முதல் முறை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply