மகிந்த ராஜபக்சவிற்கு ஒரு டிகிரி குறைந்தவர் இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன : சிவாஜிலிங்கம்
தமிழ் மக்களுக்கு செய்யும் கொடுமைகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஒரு டிகிரி குறைந்தவர் இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 100 நாள் வேலைத்திட்டத்தில் புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கான எந்த பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கவில்லை. ஏதோ முதல் 220 ஏக்கர் காணியினை விடுவித்து விட்டு, தற்போது, முழமையாக 1000 ஏக்கர் காணியினை விடுவித்துள்ளார்கள். அந்தவகையில் பார்க்கப் போனால், இனப்பிரச்சினைத் தீர்வு 65 ஆண்டுகள்கடந்த நிலைமை கேள்விக்குறியாக இருக்கின்றது.
தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கானவர்களை கொலை செய்தமைக்காக முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவிற்கு பீல்ட் மாஸ்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அப்படிபட்டவருக்கு ஒரு வாரத்தில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதென்றால், சிறைகளில் உள்ள 300 அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு ஏன் வழங்க முடியாது. அரசியல் கைதிகளுக்கான பொது மன்னிப்பினை கட்டம் கட்டமாக 25 பேர் முதல் பேர் வரையாக பொது மன்னிப்பு வழங்கியருக்க கூடாதென்றும் அவர் கேள்வி எழுப்பினார். அன்னப்பறவை என்பது ஒரு இதிகாச பறவை, தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற அன்னப்பறவை பாலையும், தண்ணியையும் வேறாக்குவது போன்று, சிங்கள மக்களுக்கு மட்டுமே தனது சேவையினை செய்கின்றது. அந்தவகையில், தற்போது அன்னத்திற்குள்ளும் புடுங்குப்பாடு நடைபெற்று வருகின்றது. அதனால் அன்னப்பறவையினால் நீத்தவும் முடியவில்லை நடக்கவும் முடியவில்லை. ஆனால், இனப்பிரச்சினை என்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிங்கள தரப்பினரை பொறுத்தவரையில், தாம் வெற்றி பெற்றதாக கருதுகின்றார்கள். உண்மையில் சிங்கள தரப்பினருக்கு வெற்றி தான். ஐ.நா விசாரணை அறிக்கை 6 மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதென்பது முதல்தர வெற்றி, அத்துடன், உள்ளக விசாரணையினை இங்கு நடாத்துவதற்கு அனுமதி பெறுவார்களாயின் முழு வெற்றியும் அவர்களுக்கே என்றும் சுட்டிக் காட்டினார்.
எனவே, இந்த விடயங்கள் தமிழ் மக்களுக்கு பெரிதும் பின்னடைவினைக் கொடுக்கும். அந்தவகையில், முக்கியமாக இரண்டு விடயங்களை அழுத்திக் கூற வேண்டும். பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்;விற்கான முன்னேற்ற அறிக்கையினை 6 மாத காலத்திற்குள் இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கொடுக்க வேண்டும். அதன்போது தான் அரசாங்கத்தின் ஏமாற்று வித்தை சர்வதேசத்திற்கு தெரியவரும். அரசியல் தீர்;வினை இறுக்கமாக பின்பற்ற வேண்டிய தேவை இருக்கின்றது. அத்துடன், அரசியல் தீர்வு தேவை என்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அரசியல் தீர்வுக்கு இறுக்கமான கோரிக்கைகளை வைக்க வேண்டும். சிங்கள பேரினவாத அரசை நம்பி ஏமாந்து போக முடியாது. வேளிநாட்டு மத்தியஸ்தம் ஒன்றின் ஊடாகவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். இந்த அரசு உள்ளே வைத்து குத்த பார்க்கின்றார்கள். ஆட்சி மாறினாலும் தமிழ் மக்களை பொறுத்தவரையில், காட்சிமாறவில்லை. உணர்வு பூர்வமான கவனயீர்ப்பின்மூலம் நடவடிக்கை மேற்கொள்ள தாம் ஒன்றிணைய வேண்டும். அந்தவகையில், அந்த அரசாங்கம் காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் விடயத்தில் தீர்க்கமான முடிவினைச் சொல்ல வேண்டும். அதேநேரம் இலங்கை நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிரான காணி சுவீகரிப்பு மற்றும் காணாமல் போனோர்கள் விடயங்களை பற்றி சர்வதேசத்திற்கு சொல்வதன் மூலம் தான் நியாயத்தினைப் பெற்றுக் கொள்ள முடியும்.ஏனெனில், இது பாரதூரமான விடயங்கள். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் ஒரு போர்க்குற்றவாளி தான், இந்நாள் ஜனாதிபதியும் போர்க்குற்றவாளி தான். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இருவரும் அண்ணண் தம்பிகள், முன்னாள் ஜனாதிபதி செய்த கொடுமைகளும், இந்நாள் ஜனாதிபதி செய்த கொடுமைகளும் ஒரு டிகிரி குறைவு. துற்போதைய அரசினையும் நம்ப முடியாது. ஐமத்திரிபால சிறிசேன ஆட்சி தலைமையில் இருக்கின்ற போது, அரசியல் தீர்வு கிடைக்காது. அதேபோன்று சர்வதேச நீதியும் தமிழ் மக்களுக்கு கிடைக்காது.
சர்வதேச மத்தியஸ்தத்தின் ஊடாகவே தமிழ் மக்களுக்கான நீதி கிடைக்கும். சிறைச்சாலைகளில் இருக்கும் அரசியல் கைதிகள் தான் 300 பேர் இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் இருக்கின்றார்கள். இறுதி யுத்தத்தின் போது காணாமல் போனவர்கள் மற்றும் இராணுவத்தில் சரணடைந்தவர்கள் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டியது அரசாங்கத்தின் கடமை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply