முன்னாள் ஜனாதிபதி தான் விட்ட தவறை ஒப்புக் கொண்டுள்ளார் : அமைச்சர் அஜித் பி. பெரேரா 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ தான்விட்ட தவறுகளை தனது வாயாலேயே ஒப்புக் கொண்டிருப்பதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார். இதற்கு ஊடகங்களே சாட்சியெனவும் அவர் சுட்டிக் காட்டினார். “என்னிலும் பிழை இருந்தது. பிழை செய்த சிலரை நான் விடுதலை செய்தேன். பிழை செய்தவர்களுக்கு நான் தண்டனை பெற்றுக் கொடுக்கவில்லை.

அவற்றை மூடி மறைக்க முயற்சித்தேன்” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருப்பதன் மூலம் தான்விட்ட தவறுகளை அவரே ஒப்புப்கொண்டுள்ளார் என்றும் பிரதியமைச்சர் தெரிவித்தார். தனது வாயை கட்டுப்படுத்த முடியாது என்ற உண்மையினை அறிந்து வைத்துள்ளதாலோ என்னவோ அவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கும் பொலிஸ் திணைக்களத்திற்கும் நேரில் செல்ல அஞ்சுகின்றார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தகவல் ஊடகத்துறையமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் இதனை தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி கூறியிருப்பதனைக் கேட்டு 58 இலட்சமாவிருந்த அவரது ஆதரவாளர்கள் 20 இலட்சத்தால் குறைவடைந்துள்ளனர். ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களித்த எந்தவொரு மனசாட்சியுடைய நபரும் நேரடியாக நீங்கள் என்ன தவறு விட்டீர்கள், வேறுயார் தவறு இழைத்தார்கள்? எவ்வாறான தவறுகளை மூடி மறைத்தீர்களென அவரிடம் நேரடியாக கேள்வியெழுப்ப லாம்.

இதேவேளை மஹிந்தராஜபக்ஷ கூறியிருப்பதனை அடிப்படையாகக் கொண்டே பொலிஸ் திணைக்களம் மேற்படி கேள்விகளை நிச்சயம் அவரிடம் எழுப்பும். அப்போது அவரால் அதனை மறுக்க இயலாது என்றும் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply