கொஞ்ச நேரம் காத்திருக்கச் சொன்ன சலூன் கடைக்காரரை சுட்டுக் கொன்ற வாடிக்கையாளர்
தன்னை சிறிது நேரம் காத்திருக்கச் சொன்ன சலூன் கடைக்காரரை வாடிக்கையாளர் ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கொலை செய்யப்பட்ட சலூன் கடைக்காரரின் குடும்பத்தினர் போலீசில் அளித்துள்ள புகாரின் படி, தென்-கிழக்கு டெல்லியின் ஜாமியா நகர் பகுதியில் உள்ள சலூன் கடைக்கு நேற்று முன்தினம் முடி வெட்டுவதற்காக அப்ரம் என்பவர் வந்துள்ளார். அப்போது கடையில் இருந்த இக்ரார் வேறொரு வாடிக்கையாளருக்கு சிகை திருத்தம் செய்து கொண்டிருந்ததால் அப்ரம்மிடம் சிறிது நேரம் காத்திருக்குமாறு சொன்னார்.
இதை ஏற்றுக் கொள்ளாத அப்ரம் இக்ராருடன் சண்டை போட்டு, அவரது கன்னத்திலும் அறைந்துள்ளார். உடனடியாக தனது வீட்டுக்குச் சென்ற இக்ரார் தனது அண்ணன் இர்ஷாத்தை கூட்டி வந்துள்ளார். இர்ஷாத் வந்து ”ஏன் இப்படி கலாட்டா செய்கிறீர்கள்?” என்று அந்த வாடிக்கையாளரைக் கேட்டதுதான் தாமதம், அப்ரம் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து இர்ஷாத்தின் நெஞ்சில் சுட்டுவிட்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடியுள்ளார்.
மருத்துவமனைக்கு எடுத்து செல்வதற்குள் இர்ஷாத்தின் உயிர் பிரிந்து விட்டது. இந்த சம்பவம் நேற்று வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, உள்ளூர் மக்கள் ஜாமியா நகர் காவல் நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட, குற்றவாளியான அப்ரம்மைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply