சிறேசேனா மீது ராஜபக்சே குற்றச்சாட்டு

சிறேசேனா அரசு தன்னை பழிவாங்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ள இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே, ஊழல் புகாருக்கு உரிய ஆதாரம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கை அதிபராக ராஜபக்சே இருந்த போது, அவரும் அவரது குடும்பத்தினரும் ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி, சிறிசேனா தலைமையிலான புதிய அரசு விசாரணை நடத்தி வருகிறது. அரசு நிதியில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ராஜபக்சேவின் சகோதரரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்சேவிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரும், முன்னாள் அதிகாரிகள் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கை பற்றி கருத்து தெரிவித்துள்ள ராஜபக்சே, தம்மை பழிவாங்க சிறிசேனா அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டி உள்ளார். தாமோ தனது குடும்பத்தினரோ ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபடவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை அரசிடம்  ஆதாரம் உள்ளதா என்றும் ராஜபக்சே கேள்வி எழுப்பியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply