பாகிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் ஏவுகணை சோதனை
பாகிஸ்தானில் உள்ள தாலிபான் தீவிரவாதிகள் அதிநவீன ஏவுகணையை தயாரித்து விண்ணில் ஏவி சோதனை நடத்தியிருப்பது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலிபான் இயக்கத்தின் பொறியியல் தொழில்நுட்ப பிரிவு இதனை உருவாக்கியுள்ளது. அந்த ஏவுகணைக்கு ‘ஒமர்-1’ என பெயரிட்டு விண்ணில் ஏவி வெற்றிகரமாக சோதனை நடத்தியுள்ளனர். இது குறித்த வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். தாலிபான்களின் ‘ஒமர்-1’ ஏவுகணை பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்து விலகிய தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவத்திடம் உள்ள ஏவுகணை போன்ற தோற்றத்தில் உள்ள இந்த ஏவுகணை, எதிரிகளுக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும் என்று தாலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply