டெல்லியில் மீண்டும் நிலநடுக்கம் : மக்கள் பீதி

டெல்லி, பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களை உலுக்கிய நில அதிர்வுக்கு இதுவரை 41 பேர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதனிடையே, டெல்லியில் நேற்று மாலை மீண்டும் நிலநடுக்கம் நிகழ்ந்ததால், மக்கள் பீதியடைந்தனர். நேபாளத்தின் பாதிப்பு வடமாநிலங்களிலும் எதிரொலித்தது. தலைநகர் டெல்லியிலுள்ள, புறநகர் பகுதியான நொய்டாவிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் இருந்தது. நேபாளத்தை ஒட்டியுள்ள சிக்கிமிலும், பீகார், மேற்குவங்கம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

சென்னை மற்றும் புதுச்சேரியிலும் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, இந்தியாவில் இருந்து பிஎஸ்என்எல் தொலைபேசிகளில் நேபாளத்திற்கு செய்யப்படும் அழைப்புகள் அனைத்தும் அடுத்த 3 நாட்களுக்கு உள்ளூர் அழைப்பாகவே கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply