வெனிசுலா அதிபர் மதுரோ மீது மாம்பழம் வீசிய பெண்ணுக்கு வீடு ஒதுக்கீடு

வெனிசுலா அதிபர் மீது மாம்பழம் வீசிய பெண்ணுக்கு வீடு ஒதுக்கப்பட்டது. தென்அமெரிக்காவில் உள்ள வெனிசுலா நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோ (52). இவர் மரணம் அடைந்த முன்னாள் அதிபர் ஹியூகோ சாவேசின் தீவிர ஆதரவாளர் ஆவார். இவர் 2013–ம் ஆண்டில் புதிய அதிபராக பதவி ஏற்றவுடன் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவரிடம் பலர் மனு கொடுத்தனர். ஆனால், அவரை நெருங்க முடியாதவர்கள் ஒரு பழத்தில் மனுவை கட்டி அவர் மீது வீசி எரிந்தனர். அதை பெற்றுக் கொண்ட அவர் பொது மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி வருகிறார்.இந்த நிலையில் அவர் சமீபத்தில் அராகுவா மாகாணத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் மீது மார்லெனி ஆலிவோ என்ற பெண் மனுவுடன் கூடிய மாம்பழத்தை வீசி எறிந்தார்.

அது நிகோலஸ் மதுரோ மீது விழுந்து கவனத்தை ஈர்த்தது. அந்த மனுவில் அவர் தனக்கு குடியிருக்க ஒரு வீடு வேண்டும் என எழுதியிருந்தார்.

அதன் பின்னர் அதிபர் மதுரோவிடம் இருந்து ஒருநாள் மார்லெனி ஆலிவோவுக்கு டெலிபோன் கால் வந்தது. அதில் மதுரோ பேசினார். ‘‘அப்போது, அவர் உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டது. அழகான வீடு ஓன்று அரசு சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

இதனால் ஆலிவோ ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி அடைந்தார். தனது மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

இது குறித்து பலர் ‘டுவிட்’டரில் பலவித ‘ஜோக்’குகளுடன் கருத்து தெரிவித்துள்ளனர். மாம்பழம் வீசியவருக்கு அதிபர் வீடு வழங்கியுள்ளார். அதே போன்று அன்னாசி பழம் வீசினால் என்ன வழங்குவார் என்பன போன்ற கருத்துகள் உலாவருகின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply