காத்மாண்டுவில் கடும் மழை: மீட்புப் பணிகள் பாதிப்பு- விமான நிலையம் மூடப்பட்டது

நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் இதுவரை 2200 பேருக்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். கடும் சேதம் ஏற்பட்டுள்ள நேபாளத்திற்கு எல்லா வகையிலும் இந்தியா உதவி செய்யும் என்று பிரதமர் அறிவித்திருந்தார். இதன்பயனாக இன்று இந்தியா 13 ராணுவ விமானத்தை அங்கு அனுப்பியுள்ளது. முதல் நிலநடுக்கத்திற்குப்பின் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் காத்மாண்டு விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முடியாத நிலைமை ஏற்பட்டதால் விமான நிலையம் மூடப்பட்டு பின்னர் மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. விமான நிலையம் மூடப்பட்டதால் வெளிநாடு செல்ல வேண்டிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும் என்ற பழமொழிக்கேற்ப அங்கு 24 மணி நேரம் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.

இதன்படி இன்று இரவு இடியுடன் கூடிய கடும் மழை பெய்து வருகிறது. இதனால் காத்மாண்டு விமானம் நிலையம் மீண்டும் மூடப்பட்டது. மீட்புப் பணியும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply