இலங்கையில் காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணை அறிக்கை தாக்கல்
இலங்கை இறுதிகட்ட போரின் போது ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன், ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அவர்களின் உறவினர்கள் இலங்கை அரசை வலியுறுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய ராஜபக்சே அரசால், 3 நபர் விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி
மேக்ஸ்வெல் பரணகமா தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழுவினர், கடந்த 1983 முதல் 2009-ம் ஆண்டு வரை காணாமல்போனவர்கள் குறித்த விசாரணையை தொடங்கினர். இந்த குழுவினரிடம், காணாமல் போனவர்கள் குறித்து 16 ஆயிரத்து 153 புகார்கள் வந்தன. இதில் 5 ஆயிரத்து 200 புகார்கள், பாதுகாப்பு
வீரர்கள் மாயமானது குறித்தது ஆகும். இந்த புகார்கள் தொடர்பாக சுமார் 1440 புகார்தாரர்களிடம் இருந்து வாய்வழி சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டன.
இந்த குழு தனது இடைக்கால அறிக்கையை சிறிசேனா அரசிடம் நேற்று முன்தினம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில், ‘இலங்கையில்
மக்கள் காணாமல் போன சம்பவங்களுக்கு ராணுவத்தினர் மற்றும் போராளி குழுக்கள் காரணம்’ என கூறப்பட்டு உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply