100 நாள் வேலைத்திட்டத்தில் மலையகத்தில் பசுமை புரட்சி ; அனைவருக்கும் காணியுரிமை

புதிய அரசின் நூறு நாள் திட்டத்தில் பெருந்தோட்ட தொழில்துறையில் புரட்சிகரமான மாற்றம் ஏற்பட்டு நாட்டின் ஏனைய சமூகத்தினரோடு போட்டி அடிப்படையில் காணியுரிமையை பெறும் நிலை மலையகத்தில் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ தெரிவித்தார். பசுமை பூமி பத்திரங்கள் கையளிக்கும் வைபவத்திலே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். பண்டாரவளை மாநகர சபை மண்படத்தில் (25) ஆயிரம் தொழிலாளர்களுக்கு சட்ட ரீதியான காணி உரிமை வழங்குவதற்கான “பசுமை பூமி” பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்ட சிலருக்கு “பசுமை பூமி” காணி உரிமை வழங்குவதற்கான பத்திரங்களை வழங்கினார்.

பதுளை மாவட்டத்தின் அடாவத்தை, சோலன்ஸ். பட்டவத்தை, மாதோலை, தெல்பத்தை, நயாபெத்தை, கசாகொல்லை. தங்கமலை, நிவ்பேக் ஆகிய பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கே மேற்படி காணிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்து தமது உரையில் 1993 ஆம் ஆண்டு ஜனாதிபதி பிரேமதாசவினால் தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி மற்றும் வீட்டுரிமைகளை வழங்க திட்டமிடப் பட்டிருந்தது. தன் பிரகாரம் நானும் அமரர் செளமியமூர்த்தி தொண்டமானும் 1994 ஆம் ஆண்டு நுவரெலியாவின் அத் திட்டத்தினை ஆரம்பித்த போதிலும் ஜனாதிபதி பிரேமதாசவின் மறைவினால் அதை தொடர்ந்து முன்னெடுக்க முடியாமல் போய்விட்டது. அதையடுத்து இருபது வருட காலத்திற்குப் பின்னர் மைத்திரியின் ஆட்சியில் அத்திட்டம் நடைமுறைப் படுகின்றது.

அந்நிய செலாவணியின் பெரும் பகுதியை இந்நாட்டிற்குப் பெற்றுக் கொடுக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏழு பேர்ச் விஸ்தீரணமுள்ள காணி உரிமை வழங்குவதற்கான பத்திரங்களை வழங்க முடிகின்றது. அத்துடன் தோட்டத் தொழிலாளர்களுக்கு தலா பன்னிரண்டு இலட்ச ரூபா செலவிலான தனி வீடுகளும். அரசினால் நிருமாணித்துக் கொடுக்கப்படும். மேலும் இந்திய அரசினால் 25 ஆயிரம் தனி வீடுகளை அமைக்கவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

தற்போதைய நிலையில் 370 தனி வீடுகளுக்கு பெருந் தோட்டப் பகுதிகளில் அடிக்கற்கள் நாட்டப்பட்டிருக்கின்றன. இது ஆரம்பம் மட்டுமே. தொடர்ந்தும் சேவைகள் மென்மேலும் விஸ்தரிக்கப்படும்.

வழங்கப்படும் காணி உரிமைப் பத்திரங்கள் கணவனுக்கும் மனைவிக்குமான சமநிலையில் அமையும். இதன் மூலம் பெருந்தோட்டப் பெண்களுக்கும் காணி உரிமைக்கான அங்கீகாரத்தினைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றோம்.

பெருந்தோட்டத் தொழில்துறையின் எதிர்காலம் பல்வேறு காரணங்களினால் கேள்விக்குறியாக இருந்து வருகின்றது. தற்போதைய இளைஞர். யுவதிகள் அத்தொழில் துறையில் அக்கறையில்லா திருக்கின்றனர். ஆகையினால் அத்தொழில் துறையினை நவீன முறைப்படி மாற் றியமைக்க வேண்டும். அதன்மூலம் தோட்டத் தொழில்துறையின் எதிர்காலத்தை வளப்படுத்தும் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்” என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply