வழக்கறிஞர் பவானி சிங்க்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், வழக்கறிஞர் பவானி சிங் ஆஜராவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி, ஜெயலலிதா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இதில், அரசுத் தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜரானார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., பொதுச் செயலாளர் அன்பழகன், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், கடந்த 23ம் தேதி சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் எழுத்துப்பூர்வமான வாதங்களை  தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply