அமெ­ரிக்க இரா­ஜாங்க செய­லாளர் ஜோன் கெரி எதிர்­வரும் சனிக்­கி­ழமை இலங்­கைக்கு வருகிறார்

அமெ­ரிக்க இரா­ஜாங்க செய­லாளர் ஜோன் கெரி எதிர்­வரும் மே மாதம் இரண்டாம் திகதி சனிக்­கி­ழமை இலங்­கைக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற் ­கொள்­ள­வுள்ளார் என்று வெளி­வி­வ­கார அமைச்சின் தக­வல்கள் தெரி­வித்­துள்­ளன. மேலும் 24 மணித்­தி­யால விஜ­ய­மா­கவே ஜோன் கெரியின் இலங்கை விஜயம் அமையும் எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இலங்­கைக்கு விஜயம் செய்­ய­வுள்ள அமெ­ரிக்க இரா­ஜாங்க செயலர் ஜோன் கெரி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க, வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர உள்­ளிட்­டோரை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார்.

அத்­துடன் புதிய அமெ­ரிக்க தூத­ர­கத்­திற்­கான அடிக்கல் நாட்டு வைப­வத்­திலும் வெசாக் தோர­ணங்­களை அங்­கு­ரார்ப்­பணம் செய்து வைக்கும் நிகழ்­விலும் ஜோன் கெரி பங்­கேற்க உள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

மேலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­தி­க­ளையும் சிவில் அமைப்­புக்­களின் பிர­தி­நி­தி­க­ளையும் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார். இத­ன­போது இலங்­கைக்கும் அமெ­ரிக்­கா­வுக்கும் இடை­யி­லான உறவை மேலும் வலுப்­ப­டுத்­து­வது குறித்தும் விரி­வாக ஆரா­யப்­ப­ட­வுள்­ளது.

1972ம் ஆண்டு ஜூலை மாதம் அமெ­ரிக்க ராஜாங்கச் செய­லா­ள­ராக கமை­யாற்­றிய வில்­லியம் பியர்ஸ் ரொஜர்­ஸிற்கு அடுத்­த­ப­டி­யாக ஜோன் கெரியே இலங்­கைக்கு விஜயம் செய்­கின்றார் என்­பது விசேட அம்­ச­மாகும்.

இந்­நி­லையில் ஜோன் கெரியின் இலங்கை விஜயம் தொடர்பில் பிரதி வெளி­வி­வ­கார அமைச்சர் அஜித் பெரெரா தகவல் வெளி­யி­டு­கையில்,

அமெ­ரிக்க இரா­ஜாங்க செய­லாளர் ஜோன் கெரி விரைவில் இலங்­கைக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொள்­ள­வுள்ளார். இது முக்­கி­யத்­துவம் வாய்ந்த விட­ய­மாகும். அவரின் இலங்கை விஜ­யத்­துக்­கான திக­தி­களை விரைவில் ஊட­கங்­க­ளுக்கு அறி­விப்போம் என்றார்.

இலங்­கையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் புதிய அர­சாங்கம் அமைக்­கப்­பட்­டதும் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர அமெ­ரிக்­கா­வுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்­டி­ருந்­த­துடன் இரா­ஜாங்க செயலர் ஜோன் கெரியை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்தார்.

அத்­துடன் புதிய அர­சாங்கம் பதவியேற்றதன் பின்னர் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வால் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதுடன் பல்வேறு தரப்புக்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply