நேபாளம் அவரச உதவிகள் கோரி மீண்டும் வேண்டுகோள்
நேபாளத்தில் இப்போது ஒவ்வொரு இராணுவத்தினரும் காவல்துறையினரும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த சனிக்கிழமை அங்கு ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்தை எட்டியுள்ளது.அங்கு உதவி மருத்துவ பணியாளர்கள், மின்சாரம் உட்பட அனைத்துக்கும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் உடனடியாக அனைத்து உதவிகளும் தேவை எனக் கோரி நேபாள அரசு மீண்டும் ஒரு அவசர வேண்டுகோளை விடுத்துள்ளது.இந்த நிலநடுக்கத்தின் மையப் புள்ளியாக இருந்த குர்கா மாவட்டத்துக்கு அருகேயுள்ள கிராமங்களுக்கு இன்னும் எந்தவிதமான நிவாரணங்களும் சென்றடையவில்லை என உதவி வழங்கும் தொண்டர்கள் கூறுகிறார்கள்.அந்தப் பகுதியில் ஏராளமான இடங்கள் முற்றாக அழிந்துள்ளன என்று கூறப்படுகிறது.நான்காயிரம் பேர் வரை இதுவரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கும் வேளையில், அந்த எண்ணிக்கை மேலும் உயிரலாம் எனும் அச்சங்கள் எழுந்துள்ளன.இதனிடையே தலைநகர் காட்மாண்டுவில் ஆயிரக் கணக்கான மக்கள் மூன்றாவது நாளாக தற்காலிக கூடாரங்களில் இரவைக் கழித்துள்ளனர்.அதேவேளை பன்னாட்டு உதவிகள் அங்கு விரைவாக சென்றடைந்து கொண்டிருகின்றன. பல இடங்களில் சாலைகளில் ஏற்பட்டுள்ள தடங்கல்கள், மின்சாரம் இல்லாமை, தொடரும் மழை போன்றவற்றால் உதவிப் பணிகள் மக்களைச் சென்றடைவதில் தாமதங்களும் சிக்கல்களும் ஏற்பட்டுள்ளன.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply