இலங்கை நாடாளுமன்றத்தில் 19வது சட்டத்திருத்த மசோதா தாக்கல்

இலங்கையில் நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதி முறைமையைத் திருத்தி, ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கட்டுப்படுத்த வகை செய்யும் 19வது அரசியல் சட்ட மசோதா இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் சமர்ப்பிக்கப்பட்டது. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் போது, நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதி முறைமை ( executive presidency) ஒழிக்கப்போவதாக தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன உறுதியளித்திருந்தார்.

ஆனால் இன்று அவர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அரசியல் சட்ட திருத்த 19வது மசோதாவில், அந்த முறைமை அகற்றப்படாமல், ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுமே கட்டுப்படுத்தப்படும் சில அம்சங்கள் முன்மொழியப்பட்டிருக்கின்றன.

இந்த மசோதாவை அவையில் சமர்ப்பித்து உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன, கடந்த காலங்களில் இது குறித்து இலங்கையின் பிரதான கட்சிகளான, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி

ஆகியவை வலியுறுத்திவந்த போதிலும் அதனை அமல்படுத்தவில்லை என்றார்.

தற்போது அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறிய ஜனாதிபதி அரசியல் யாப்பின் 19 திருத்தச் சட்ட முலத்தை நிறைவேற்றுவதன் முலம் அதனை சாதிக்க முடியுமென்று கூறினார்.

இந்த மசோதா குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க , முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள சில பிரிவுகளை நீக்குவதற்கு அரசாங்கம்

நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவித்தார் .

விசேடமாக தேர்தல் நடைபெறும் சமயங்களில் தேர்தல் ஆணையாளர் விதிக்கும் உத்தரவுகளை மீறும் தனியார் ஊடக நிறுவனகளுக்கு தண்டனைகளை பெற்றுக் கொடுக்கக்கூடிய அதிகாரங்கள் இந்த சட்ட மூலத்தில் உள்ளடக்கப் பட்டிருந்தது. இந்த பிரிவு நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா பேசுகையில், தனது கட்சி 19 திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் அல்ல என்றும், அந்த திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த தவறான

ஷரத்துக்களை நீக்குவதற்க்காகவே போராடி வந்ததாகவும் கூறினார்.
வாக்கெடுப்பு நாளை

இந்த திருத்தங்கள் சம்பந்தமாக ஆராய்வதற்கு ஜனாதிபதி விசேட குழுவொன்றை நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த மசோதாவை நிறைவேற்றுமாறு உறுப்பினர்களை வலியுறுத்தும் ஆர்ப்பட்ட பேரணியொன்று இன்று காலை நாடாளுமன்றம் அருகில் நடைபெற்றது.

மாதுலுவாவே சோபித்த தேரர் உட்பட சிவில் சமுக அமைப்புக்களினால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

19 வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவத்ட்கு நடவடிக்கஐகளை எடுப்பதாக ஜனாதிபதி உறுதிமொழி வழங்கிய பின்பு ஆர்ப்பாட்டம் நிறுத்தப்பட்டது.

விவாதம் நாளைய தினமும் நடைபெறவுள்ளதுடன் வாக்கெடுப்பு நாளைய தினம் நடைபெறவுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply