உத்தரபிரதேச மாநிலத்தில் சூறாவளி காற்றுடன் மழை: 36 பேர் சாவு
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி, அமேதி பகுதிகளில் நேற்று காலை திடீரென்று பலத்த சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்த நிலையில் திடீரென்று காற்றுடன் மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்தது. ரேபரேலி அருகே உள்ள புர்வா கிராமத்தில் மின்னல் தாக்கியதில் 4 பேர் இறந்தனர். அமேதியை அடுத்த முன்ஷிகஞ்ச் என்ற கிராமத்தில் வீடு இடிந்து 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியானார்கள். கஸ்கஞ்ச் பகுதியில்
பல்வேறு இடங்களில் வீடு இடிந்து 4 பேர் உயிரிழந்தனர். மேலும் பல இடங்களில் ஏற்பட்ட சேதத்தில் மொத்தம் 36 பேர் இறந்தனர். 100 பேர் படுகாயம் அடைந்தனர்.
பல இடங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. சாலைகள் சேதம் அடைந்ததால் வாகன போக்குவரத்துகடுமையாக பாதிக்கப்பட்டது. அதேபோல மின்சார வயர்கள் அறுந்து விழுந்ததில் எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்து 5 மணி நேரம் நிறுத்தப்பட்டன
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply