தென்கொரியாவில் 295 பேர் பலி: கப்பல் கேப்டனுக்கு வாழ்நாள் சிறை
தென்கொரியாவில் கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ந்தேதி ஒரு பயணிகள் கப்பல். கடலில் மூழ்கி பெரும் விபத்து நேரிட்டது. இதில் 295 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக கப்பலின் கேப்டன் லீ ஜூன் கியாக் உள்ளிட்டவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில் லீ அஜாக்கிரதையாகவும், கவனக்குறைவாகவும் நடந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில் 36 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கடந்த நவம்பர் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தி தண்டனை வழங்க வேண்டும் என்று அப்பீல்கோர்ட்டில் அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
அந்த மேல்-முறையீட்டு வழக்கை விசாரித்த அப்பீல் கோர்ட்டு லீக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு அளித்தது. வழக்கில் தொடர்புடைய பிற 14 பேருக்கு 18 மாதங்கள் முதல் 12 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply