ஈழத் தமிழர் மயூரன் உட்பட 8 பேருக்கு இந்தோனேசியாவில் மரண தண்டனை நிறைவேற்றம்

போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த மயூரன் சுகுமார் மற்றும் அன்ரூ சான் உட்பட மொத்தம் 8 பேருக்கு சற்று முன்னர் இரவு சுமார் 12.30 மணியளவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் போதை பொருள் கடத்தல் கடுமையான குற்றமாக கருதப்படுகிறது. இந்த நிலையில் அங்கு ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தியதாக ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த ஈழத் தமிழர் மயூரன் சுகுமாறன், ஆண்ட்ரூ சான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் பிரேசில், பிரான்ஸ், நைஜீரியா மற்றும் பிலிப்பைன்சை சேர்ந்தவர்களும் இதே குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இந்தோனேசிய ஜனாதிபதியிடம் கருணை மனு அளிக்கப்பட்டது. மேலும் தண்டனை பெற்றவர்களின் நாட்டு தூதரகங்களும் தூக்கு தண்டனையை ரத்து செய்யும்படி கோரிக்கை விடுத்தன.

குறிப்பாக குற்றவாளிகள் ஆன்ட்ரூ சான், மயூரன் சுகுமாரனுக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய அரசு குரல் கொடுத்தது. அதை இந்தோனேசிய அரசு நிராகரித்தது. போதை பொருள் கடத்தலால் நாட்டில் குற்றங்கள் பெருகி நாட்டுக்கு கடும் பாதிப்புகள் ஏற்படுவதாக கூறி ஜனாதிபதி ஜோகோ விடோடோ மறுத்துவிட்டார்.

ஐ.நா.சபை உட்பட சர்வதேச அளவில் பலரும் தண்டனையை ரத்து செய்யுமாறு இந்தோனேசிய அரசிடம் கேட்டபோதிலும், தண்டனையை நிறைவேற்றியுள்ளது அந்நாட்டு அரசாங்கம்.

எனினும் இவர்களுடன் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒன்பதாவது நபரான பிலிப்பைன்ஸ் நாட்டைச்சேர்ந்த மேரி ஜேன் வெலொசோ என்னும் பெண்ணின் மரணதண்டனை கடைசி நேரத்தில் தள்ளிப்போடப்பட்டிருக்கிறது.

போதைமருந்தை கடத்துவதற்கு மேரி ஜேன் வெலொசோவை தான் பயன்படுத்திக் கொண்டதாக கூறி பெண் ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டின் காவல்நிலையத்தில் சரணடைந்தை தொடர்ந்து, மேரிக்கான மரணதண்டனை நிறைவேற்றம் தள்ளிப்போடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply