நைஜீரியாவில் தீவிரவாதிகளுடன் ராணுவம் கடும் சண்டை: 230 பேர் பலி
நைஜீரியாவில் ஒரு குறிப்பிட்ட அரசை உருவாக்க வலியுறுத்தி போகோ ஹரம் தீவிரவாதிகள் தொடர்ந்து நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக சிறுமிகளையும், பெண்களையும் அவர்கள் கடத்துவதோடு, ராணுவம் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் நைஜீரிய ராணுவத்துடன் அண்டை நாடுகளான நைஜர், கேமரூன் நாடுகளின் ராணுவமும் ஈடுபட்டு வருகிறது. இதனால் அண்டை நாடான நைஜரிலும் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் அங்கு லேக் சாத் பகுதியில் உள்ள கரம்காவில் தீவிரவாதிகளுக்கும், நைஜர் ராணுவத்தினருக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இதில் 156 தீவிரவாதிகள், 46 ராணுவ வீரர்கள், 28 அப்பாவி பொதுமக்கள் என மொத்தம் 230 பேர் பலியாகினர். 32 பேரை காணவில்லை என்று நைஜர் நாட்டு உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே நைஜீரியாவில் உள்ள சாம்பிசா வனப்பகுதியில் நைஜீரிய ராணுவத்தினர் தீவிரவாதிகளுடன் சண்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அடைத்து வைக்கப்பட்டு இருந்த 200 சிறுமிகள் மற்றும் 93 பெண்களை மீட்டனர். மீட்கப்பட்டவர்கள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிபோக் பள்ளிக்கூடத்தில் இருந்து கடத்திச்செல்லப்பட்ட சிறுமிகள் அல்ல என்று ராணுவம் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply