20ம் திருத்தம் தொடர்பில் நீதிமன்றம் செல்லவும் சத்தியாக்கிரகம் இருக்கவும் தயார் : மனோ கணேசன்

பாராளுமன்றத்தில் 19ம் திருத்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு விட்டது. இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சட்டமூல வாக்கெடுப்பில் கலந்துக்கொண்டு ஆதரவாக வாக்களித்த அனைத்து எம்பீக்களையும் நாம் பாராட்டுகின்றோம். அதேவேளை 19ன் முடிவுடன், 20ம் திருத்தம் என்ற தேர்தல் முறை மாற்ற போராட்டம் ஆரம்பித்து விட்டது என்பதை இந்நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து செயற்படும் அரசியல் கட்சிகளும் கவனத்தில் கொள்ள வேண்டும். உண்மையில் சொல்லப்போனால், 19ஐ விட, 20ம் திருத்தம் தொடர்பாகவே இந்நாட்டு சிறுபான்மை மக்கள் மிக அதிக கவனம் செலுத்த வேண்டும்.

20ம் திருத்தம் என்ற பெயரில் எங்களை பெரும்பான்மை சக்திகள் சில ஏமாற்றப்பார்க்கின்றன. எங்களுக்கு உரிய பிரதிநிதித்துவங்களை உறுதி செய்யாத எந்த ஒரு திருத்தத்துக்கும் நாம் உடன்பட போவதில்லை. இந்த பிரச்சினையை குறைத்து மதிப்பிட வேண்டாம். இது வாழ்வா, சாவா என்ற எங்கள் உயிர் பிரச்சினை. இவற்றை உறுதி செய்ய, இன்று நாம் நடத்தும் அரசியல் பேச்சுவார்த்தைகள் பயனளிக்க விட்டால், நியாயம் வேண்டி சத்தியாகிரகம் செய்ய முடிவு செய்துள்ளேன்.

அத்துடன் நீதியை தேடி நீதிமன்றம் செல்லவும் முடிவு செய்துள்ளோம். இதற்கு நமது மக்கள் ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. நமது மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளும், அரசியல் பேதங்களை மறந்து ஆதரவளிக்கும் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு என தேசிய நிறைவேற்று சபை உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply