ஜெர்மனியில் தீவிரவாதிகளின் சதித் திட்டம் முறியடிப்பு
ஜெர்மனியில் இன்று நடைபெறும் மே தின பேரணியில் தீவிரவாதிகள் நடத்தவிருந்த சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்த முயன்ற இளம் தம்பதியினர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தீவிரவாத இயக்கங்களுடன் இணைந்து தெற்கு ஜெர்மனியில் தாக்குதல் நடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டதாக அந்நாட்டின் காவல் துறை அறிவித்துள்ளது. இம்முயற்சியில் ஈடுபட்ட இளம் கணவன் மற்றும் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஆயுதங்கள் தயாரிக்கப்பயன்படும் பல்வேறு ரசாயனங்களை இந்த தம்பதியினர் வேறு வேறு இடங்களில் பொய் பெயர்களைக் கூறி வாங்கி வந்துள்ளனர். இதையடுத்து இவர்களைத் தொடர்ந்து கண்காணித்த காவல் துறை, தற்போது கைது செய்துள்ளது. 35 வயது மதிக்கத்தக்க, ஜெர்மனி மற்றும் துருக்கி நாட்டின் குடியுரிமையை வைத்துள்ள நபர் மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்ட தகவலை ஹெசன் உள்துறை அமைச்சர் பீட்டர் உறுதி செய்தார்.
ஐரோப்பிய நாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தீவிரவாத இயக்கங்களில் சேர்வதற்காக துருக்கி உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை அண்மையில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஜெர்மனியில் தீவிரவாத தாக்குதல் நடத்த இளம் தம்பதியினர் முயற்சி மேற்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply