வடகொரிய பிரதிநிதிகள் கருத்துக்கு அமெரிக்காவின் எதிர்ப்பால் பரபரப்பு
ஐக்கிய நாடுகள் அமைப்பு நடத்திய சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற வடகொரிய பிரதிநிதிகள் பேசியதற்கு அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வடகொரியாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்காவும், தென் கொரியாவும் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று ஐக்கிய நாடுகள் அமைப்பால் நடத்தப்பட்டது. மனித உரிமை மீறப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். வடகொரியா தரப்பில் கருத்துக்களை முன்வைக்க அந்நாட்டு பிரதிநிதிகளும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் அனுபவங்களைக் கூறியபோது, திடீரென இடை மறித்த வடகொரிய பிரதிநிதிகள், தங்கள் தரப்பு கருத்துக்களைப் பேசினர். ஆனால், இதற்கு அமெரிக்காவும், தென் கொரியாவும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தன. ஐக்கிய நாடுகள் அமைப்புக்கான அமெரிக்க தூதர் சமந்தா பவர், மைக்கை அணைத்துவைக்கக் கேட்டுக்கொண்டார். இதனால் நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply