அவுஸ்திரேலியா, அந்தமானில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: சுனாமி உருவாக வாய்ப்பு!

பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள பப்புவா நியூகினியாவில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இங்குள்ள கோகோப்போ நகரின் தென்மேற்கே 110 கிலோமீட்டர் தூரத்தில், உருவான இந்த நில நடுக்கம் உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் ஏற்பட்டது. பப்புவா நியூ கினியாவில் கோகோபோ நகரில் இருந்து தெற்கு – தென் மேற்கு பகுதியில் 110 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்த நில நடுக்கத்தையொட்டி பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சார்பில் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. இதே பகுதியை நேற்று 6.7 ரிக்டர் அளவிலான நில நடுக்கம் தாக்கியது நினைவிருக்கலாம்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply