தமக்கு கிடைத்ததைக் கொண்டு அதிகாரத்தை பெற்றுக்கொள்ள ரணிலுக்கு தெரியும் : விக்ரபாகு கருணாரட்ன

சிறுபான்மை சமூகத்துடன் இணைந்து நாம் போராடியது வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொள்ளவல்ல.ஜனாதிபதி தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்.இல்லாவிட்டால் மீளவும் போராட்டம் நடத்த நேரிடும். அரசியல் அமைப்பு திருத்தங்களின் ஊடாக அதிகாரத்தை அதிகரிக்க ரணில் முயற்சிக்கவில்லை.

தமக்கு கிடைத்ததைக் கொண்டு அதிகாரத்தை பெற்றுக்கொள்ள ரணிலுக்கு தெரியும். சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவர் நாட்டின் தலைமைப் பதவியை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.மஹிந்த தோற்கடிக்கப்பட்டாலும் பாசிசவாதம் சமூகத்திற்குள் ஊடுறுவும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. என புதிய இடதுசாரி கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply