பாகிஸ்தானில் ராணுவத்துடன் கடும் சண்டை: 27 தீவிரவாதிகள் உயிரிழப்பு
பாகிஸ்தானில் கைபர் ஏஜென்சி பகுதி, பழங்குடி இனத்தவர் திரளாக வசிக்கிற 8 பிரதேசங்களில் ஒன்றாகும். இங்கு பாகிஸ்தான் தலீபான், லஷ்கர் இ இஸ்லாம், தெக்ரிக் இ நபாஸ் இ ஷரியத் இ முகமதி, ஜமாத் உல் அஹ்ரார் உள்ளிட்ட இயக்கங்களை சேர்ந்த தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இங்கு தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு பாகிஸ்தான் ராணுவம் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. அமெரிக்காவும் அவ்வப்போது ஆளில்லா விமானங்களை அனுப்பி தாக்குதல் தொடுத்து வருகிறது. அங்கு தீவிரவாதிகளின் பிடியில் உள்ள டைரா பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள கார் கமர் கேல், நாகை மலிக்தீன் கேல், ஜர்மான்சா, தாவா தோ, டாங்கு, மெஹ்ராபான் கலாய், காயிஸ்ட், தார்கோ காஸ், மைலு, தோர் தாரா, மலகாபாத் ஆகிய இடங்களில் பாதுகாப்பு படையினர் நுழைந்தனர். இந்த பகுதிகள் அனைத்தும் பாகிஸ்தான் தலீபான் தீவிரவாத இயக்கத்தின் தாரிக் அப்ரிடி குழுவின் கட்டுப்பாட்டில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் இருந்து வருகின்றன.
இங்கு ராணுவத்தினர் நுழைந்ததை தொடர்ந்து, கடந்த 4 நாட்களாக தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வந்தது. நேற்று முன்தினம் இரு தரப்பினருக்கும் இடையே சண்டை வலுத்தது. தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவத்தினருடன், பீரங்கி தாக்குதல், வான்வழி தாக்குதல் என பலமுனை தாக்குதல் தொடுக்கப்பட்டது. இதன் முடிவில் 27 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளின் மறைவிடங்கள் தகர்க்கப்பட்டன. பாதுகாப்பு படையினரில் கேப்டன் அஜ்மல் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர்.
தொடர்ந்து சிராவில்லா, வாச்சாய் வேனி பகுதிகளில் தீவிரவாதிகளை குறி வைத்து பீரங்கி தாக்குதல் நடந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த தாக்குதல்களால் நிலை குலைந்து போயுள்ள தீவிரவாதிகள் ஆப்கான் எல்லையில் உள்ள செர்ஹாய், ராஜ்குல் பகுதிகளில் தஞ்சம் புகுந்து வருவதாக தெரிய வந்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply