நேபாளத்தில் அமெரிக்க கடற்படை இன்று மீட்பு பணியை தொடங்கியது
சமீபத்தில் ஏற்பட்ட பூகம்பம் நேபாளத்தை புரட்டிப் போட்டு விட்டது. தலைநகர் காத்மாண்டு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள் அழிந்தன. அங்கு முழுவதும் இடிந்தும், பாதி இடிந்த நிலையிலும் 2½ லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. மேலும் 10 ஆயிரத்து 400 அரசு கட்டிடங்கள் முழுவதுமாகவும், 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் பாதியாகவும் சேதம் அடைந்துள்ளன. மறுசீரமைப்பு பணிக்கு ரூ.13 ஆயிரம் கோடி செலவாகும் என முதற்கட்ட ஆய்வில் கணக்கிடப்பட்டுள்ளது.சேதமடைந்த கட்டிடங்களின் இடிபாடுகளை அகற்றும் பணியிலும், அதில் சிக்கியிருப்போரை மீட்கும் பணியிலும் சர்வதேச மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்க கடற்படை வீரர்கள் இன்று முதல் மீட்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
6 ராணுவ விமானங்கள், 2 ஹெலிகாப்டர்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. 100 கடற்படை வீரர்களும் நேபாள தலைநகர் காத்மாண்டுக்கு வந்துள்ளனர். இடிபாடுகளை அகற்றும் கனரக அதி நவீன ஆயுதங்களும் வரவழைக்கப்பட்டுள்ளன. அமெரிக்க கடற்படை வீரர்கள் இன்று மீட்பு பணியை தொடங்கி இருக்கின்றனர்.
இந்த தகவலை அமெரிக்க கடற்படை பிரிகேடியர் ஜெனரல் பால் கென்னடி தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply