சுதந்திரக் கட்சியின் மேதினக்கூட்டம்! 45 நிமிடங்களில் வெளியேறிய சந்திரிக்கா
கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க 45 நிமிடங்கள் மாத்திரமே இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக்கூட்டத்தின்போது அறிவிப்பாளர் சந்திரிக்காவின் பெயரை உச்சரிக்கும் போது கூட்டத்தின் ஒரு பிரிவினர் சத்தத்துடன் கரகோசம் செய்தனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பெயரை அறிவிக்கும் போது கரகோசம் சில வினாடிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரை அறிவிப்பு செய்யும் போது போதுமானளவு கரகோசம் மேற்கொள்ளப்பட்டது.
இந்தநிலையிலேயே சந்திரிக்கா 45 நிமிடங்களில் கூட்டத்தில் இருந்து சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply