அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் கொலை, இனப் பாகுபாடு இல்லையாம்

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இனப் பாகுபாடு இல்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள பவுடர்ஸ் வில்லே பகுதியை சேர்ந்தவர் மிருதுளா பென் படேல், குஜராத்தை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண்ணான இவர், வாகனங்ளுக்கு எரிவாயு நிரப்பும் நிலையத்தை நடத்தி வந்தார். கடந்த 30–ந் தேதி இரவு அவர் பணியில் இருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் அவர் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில் படுகாயம் அடைந்த மிருதுளா பென், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர்  சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு கொள்ளை முயற்சியே காரணம் என்றும், இனப் பாகுபாடு அல்ல என்றும் தெற்கு கரோலினா மாகாணப் போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு குற்றவாளி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply