லிபியா கடற்கரையில் மீட்கப்பட்ட அகதிகளின் எண்ணிக்கை 4800 உயர்வு: இத்தாலி கடற்படை நடவடிக்கை

லிபியா, ஏமன், சிரியா உள்ளிட்ட நாடுகளில் உள் நாட்டு போர் நடந்து வருகிறது. எனவே, அங்கிருந்து அகதிகளாக புறப்பட்டு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். அவர்கள் கடத்தல்காரர்களின் கள்ள படகுகளில் கும்பலாக வருகின்றனர். அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி வருவதாலும், கடல் கொந்தளிப்பாலும் மத்திய தரைக் கடலில் படகுகள் கவிழ்ந்து இந்த ஆண்டு மட்டும் 1750 பேர் பலியாகி உள்ளனர். எனவே, அகதிகள் படகை இத்தாலி கடற்படை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

தற்போது மத்திய தரைக் கடலில் தட்பவெப்ப நிலை சாதகமாக உள்ளது. எனவே, ஆயிரக்கணக்கானவர்களை ஆப்பிரிக்கா கண்டத்தில் இருந்து கடத்தல்காரர்கள் படகுகளில் ஐரோப்பிய நாடுகளுக்கு அழைத்து வருகின்றனர்.

அதை தடுக்க இத்தாலி கடற்படையினர் 17 குழுக்களாக பிரிந்து மத்திய தரைக்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லிபியா கடற்கரை பகுதியில் ஒரே நாளில் 4800 அகதிகள் மீட்கப்பட்டனர். மேலும் 10 பேர் பிணமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply