அமெரிக்கா லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நில அதிர்வு

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் பாதிப்புகள் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.இந்த நில அதிர்வு, ரிக்டர் அளவுகோலில் 3.9 அலகுகளாகப் பதிவானது. நில அதிர்வு காரணமாக, கட்டடங்கள் அதிர்ந்ததால், மக்கள் பீதியடைந்தனர். அமெரிக்க நேரப்படி, அதிகாலை 4.07 மணிக்கு, இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.இது அந்தப் பகுதியில், கடந்த ஒரு மாதத்தில் ஏற்பட்ட இரண்டாவது நில அதிர்வாகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply