பிரதமர் மெர்கலின் போன் ஒட்டுக்கேட்பு: அமெரிக்கா மீதான விசாரணையை கைவிட்டது ஜெர்மனி

பிரதமர் மெர்கலின் தொலைபேசி அழைப்புகளை அமெரிக்கா ஒட்டுக்கேட்ட விவகாரத்தில் விசாரணையை கைவிட்டது ஜெர்மனி அரசு. பிரதமர் மெர்கலின் தொலைபேசி அழைப்புகள் அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பான என்.எஸ்.ஏ (ண்ஸா)-வினால் ஒட்டுக் கேட்கப்பட்டதாக ஜெர்மனி உளவு அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இவ்விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கும்படி அந்நாட்டிற்கான அமெரிக்க தூதருக்கு ஜெர்மன் அரசு சம்மன் அனுப்பியது. அதன் பின் அமெரிக்க அதிபர் ஒபாமாவைத் தொலைபேசியில் அழைத்துப் பேசிய ஏஞ்சலா மெர்கல், தனது கண்டனத்தையும் பதிவு செய்தார்.

இதனையடுத்து மெர்கலின் தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்படவில்லை என்றும், இனிமேலும் ஒட்டுக்கேட்கப்படாது எனவும் அதிபர் ஒபாமா உறுதியளித்துள்ளதாக வெள்ளை மாளிகை கூறியிருந்தது. எனினும், இது குறித்து விசாரணை நடத்த ஜெர்மனி அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த வாரம் ஜெர்மனியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில், அமெரிக்க அதிபர் ஒபாமா மெர்கலுடன் இதுகுறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஒட்டுக்கேட்டது தொடர்பான விசாரணையை கைவிட்டுவிட்டதாக ஜெர்மனி இன்று அறிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply