மலேசிய விமானத்தின் என்ஜினில் திடீர் கோளாறு: ஆஸ்திரேலியாவில் அவசரமாக தரையிறங்கியது

மலேசிய விமானத்தின் என்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டதால், அவ்விமானம் ஆஸ்திரேலியாவில் அவரமாக தரையிறங்கியது. மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எம்.எச். 148 விமானம், அந் நாட்டு நேரப்படி இன்று பிற்பகல் 2.16 மணியளவில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்டு வானில் பறந்த சில நிமிடங்களில் அதன் என்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானத்தை மெல்போர்ன் விமான நிலையத்துக்கு திருப்ப முடிவு செய்த விமானி, ஆஸ்திரேலிய விமான கட்டுப்பாட்டு மைய அதிகாரிகளை தொடர்பு கொண்டார்.

உடனடியாக அனுமதி அளிக்கப்பட்டதால், பிற்பகல் 3 மணியளவில் விமானம் மீண்டும் மெல்போர்னில் தரையிறங்கியதாக அவ்விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். அதே சமயம் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு குறித்து தெரிவிக்க அவர்கள் மறுத்து விட்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply