விளையாடிய போது விபரீதம்: துப்பாக்கி வெடித்து 3 வயது சிறுவன் பலி

அமெரிக்காவின் ஒகியோவில் சின்சினாட்டி பகுதியை சேர்ந்தவர் எலிசபெத் கிரீன். இவரது 3 வயது மகன் மார்கஸ் கிரீன். சம்பவத்தன்று எலிசபெத் தனது துப்பாக்கியை கைப்பையில் வைத்து விட்டு வீட்டில் வேலைகளை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அவரது மகன் மார்கஸ் கிரீன் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வெளியே சென்று அதை வைத்து விளையாடி கொண்டிருந்தான். இதற்கிடையே துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்து பார்த்தார்.

அங்கு சிறுவன் மார்கஸ் மார்பில் குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தான். உடனே அவனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவன் பரிதாபமாக இறந்தான்.

தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து எலிசபெத் கிரீனிடம் விசாரித்தனர். அப்போது தாயின் கைத்துப்பாக்கியை எடுத்து விளையாடிய போது அது திடீரென வெடித்ததில் மார்பில் குண்டு பாய்ந்து அவன் இறந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஒகியோ மாகாணத்தில் இந்த மாதத்தில் மட்டும் இதுவரை இது போன்று 2 சம்பவங்கள் நடந்துள்ளன. அமெரிக்காவில் ஆண்டு தோறும் 100 குழந்தைகள் இது போன்ற செயல்களால் இறக்கின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply