சிரியாவின் அலப்போ நகரில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 20 பேர் பலி

சிரியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான அலப்போவில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 20 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. சிரியாவில் உள்ள மனித உரிமைகள் அமைப்பு இந்த ராக்கெட் தாக்குதலில் 2 குழந்தைகள் உட்பட 13 பேர் பலியாகியிருப்பதாகவும், இது மேலும் உயரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

கிழக்கு அலப்போ நகரில் வெறும் 4 மணி நேரத்திற்குள் 250-க்கும் மேற்பட்ட ராக்கெட்கள் வீசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயங்கர தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் வீடியோ காட்சிகளை டி.வி.யில் பார்ப்பவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply