சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க தேசிய கொள்கை

சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கையில் ஒன்றிணைந்த தேசிய கொள்கை வகுக்கப்படுமென ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்ஹ தெரிவித்தார். ஜெனீவாவில் ஐ.நா. சபையின் 29 வது அமர்வு ஜூன் 15 ம் திகதி ஆரம்பமானது. இதில் இலங்கை சார்பில் ஆரம்ப உரையை நிகழ்த்தியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். குடியேற்றகாரர்களை ஆட்கடத்தல் காரர்களினால் பாதிப்புக்குள்ளானவர்களாக கருதும் இலங்கை அனைத்து சட்டவிரோத குடியேற்றம், ஆட்கடத்தல், கடத்தல் ஆகியவற்றுக்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

சட்டவிரோத குடியேற்றம் தொடர்பில் இலங்கை விழிப்புணர்வுடனேயே செயற்பட்டு வருகின்ற போதிலும் அதனுடன் சம்பந்தப்பட்ட விவகாரம் குறித்து சற்று வித்தியாசமாக கையாளும் நோக்கில் ஒன்றிணைந்த தேசிய கொள்கையொன்றை நிறுவ தீர்மானித்தி ருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இது அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் குடியெற்றவாசிகளுக்கான நலன்புரி செயற்பாடுகளுக்கு மேலதிக சக்தி மற்றும் வளங்களை பெற்றுத் தருவதாக அமையுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்கு கடந்த மே மாதம் விஜயம் செய்திருந்த குடியேற்றவாசிகளின் மனித உரிமைகளுக்கான விசேட தூதுவர் பிரான்சிஸ் கிரேப், இலங்கை நிலவரம் தொடர்பில் ஐ.நா.வின் அறிக்கையொன்றை முன்வைத்ததை தொடர்ந்தே இலங்கைக்கான தூதுவர் ரவிநாத் ஆரியசிங்ஹ ஐ.நா.வில் உரையாற்றினார்.

பிரான்சிஸ் கிரேப் மே 19 முதல் 26 வரை இலங்கையில் தங்கியிருந்தார். இச்சந்தர்ப்பத்தில் அவர் சிவில் சமூக அமைப்புக்கள், வெளிநாடுகளில் வாழ்பவர்களின் குடும்பங்கள் மற்றும் வெளிநாடிகளிலிருந்து திரும்பி வந்தவர்கள் ஆகியோரை சந்தித்தார். அவரது விஜயத்திற்கு தேவையான முழுமையான ஒத்துழைப்பை இலங்கை அரசாங்கம் வழங்கியிருந்தது.

அவர் தனது அறிக்கையில், “இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக பல சிறந்த செயன்முறைகளை நடை முறைப்படுத்தி வருகின்றது.

இருப்பினும் சில விடயங்களில் மேலதிக சம்பளம் தேவைப்படுகிறது” என்றும் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply