மொஹமட் சியாம் கொலை வழக்கு வாஸ் பிணையில் விடுதலை சட்டவிரோத ஆயுத வழக்கில் மீண்டும் விளக்கமறியல்

கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் ஷியாமின் கொலை தொடர்பில் இரண்டரை வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்த்தன அடங்கலான ஐந்து பொலிஸ் அதிகாரிகளையும் கொழும்பு மேல் நீதிமன்றம் தலா ஐந்து இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், 40 இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் நேற்று விடுதலை செய்தது.ஐந்து பிரதிவாதிகளினதும் வெளிநாட்டு கடவுச்சீட்டை முடக்குவதற்கு உத்தரவிட்ட நீதிமன்றம், வாராந்தம் சீ.ஐ.டி முன் ஆஜராகுமாறும் அவர்களுக்குப் பணிப்புரை விடுத்துள்ளது.

2013 ஏப்ரல் 4ஆம் திகதிக்கும் 22ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் மொஹமட் பெளஸ்டீன் மற்றும் கிரிஷாந்த கோரளகே ஆகியோருடன் இணைந்து மொஹமட் ஷியாம் என்பவரை கொலை செய்ய சதி செய்ததாக ஐந்து பிரதிவாதி களுக்கும் எதிராக சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு மூவர் அடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் அவர்களை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர். இவர்கள் இரண்டரை வருடங்களுக்கு மேலாக விளக்கமறியலில் இருப்பதாகவும், அவர்களை உகந்த பிணை அடிப்படையின் கீழ் விடுதலை செய்யுமாறும் கோரியிருந்தனர். இதற்கு வாதிகள் தரப்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஆட்சேபனை தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிபதிகள் குழாம் பிரதிவாதிகளை பிணையில் விடுதலைசெய்ய அனுமதித்ததுடன், பிணை நிபந்தனைகளை மீறினால் பிணையை இரத்துச் செய்வதாகவும் எச்சரித்தது. பிரதிவாதிகள் இரண்டரை வருடங்களுக்கு மேலாக விளக்கமறியலில் இருப்பதைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்குவதாக நீதிபதிகள் குழுவிற்குத் தலைமைவகித்த நீதியரசர் லலித் ஜயசூரிய நீதிமன்றத்தில் அறிவித்தார்.

இதன்படி முன்னாள் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்த்தன, சப்இன்ஸ்பெக்டர் லக்மின இந்திக்க பமுனுசிங்க, சார்ஜன்ட் காமினி அத்தபத்து, கான்ஸ்டபிள்களான ஆனந்த சஞ்சீவ, கெலும் திசாநாயக்க ஆகியோர் நேற்று நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

எனினும், கெலும் ரங்க திஸா நாயக்க என்ற பிரதிவாதி தவிர முன் னாள் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன சட்டவிரோத ஆயுதங் களை தம்மிடம் வைத்திருந்த மற்று மொரு வழக்குக்காக மீண்டும் ஆகஸ்ட் 24ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply