எனது கணவர் நிச்சயமாக திரும்பி வருவார்: விமானி சுபாஷ் சுரேஷின் மனைவி உறுதி

என்னுடைய தெய்வபக்தி வீண்போகாது என்றும், எனது கணவர் நிச்சயமாக திரும்பி வருவார் என்றும் மாயமான விமானத்தில் பயணம் செய்த விமானி சுபாஷ் சுரேஷின் மனைவி உறுதியாக கூறினார். பாதுகாப்பு ஒத்திகையின் போது கடந்த 8-ந்தேதி மாயமான குட்டி விமானத்தின் கண்காணிப்பாளராக இருந்தவர் சுபாஷ் சுரேஷ். மாயமான விமானம் குறித்தும், அதில் பயணம் செய்த விமானிகள் குறித்தும் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.

சுபாஷ் சுரேஷின் மனைவி தீபலட்சுமி நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடிக்கு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இருந்து இதுதொடர்பாக கோரிக்கை ஒன்று வைத்தார். அதில், ‘எனது கணவர் விமானி சுபாஷ் சுரேஷ் கடந்த 8 நாட்களாக காணவில்லை. அவரை கண்டுபிடிக்கை நீங்கள் தலையிட வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் நேற்று தீபலட்சுமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வீட்டிற்கு திரும்பிவிடுவதாக கூறி சென்றவர் இன்னும் திரும்பவில்லை. கடந்த 8 நாட்களுக்கு மேல் மிகவும் துயரத்துடன் இருக்கிறோம். என்னுடைய தெய்வபக்தி ஒரு போதும் வீண் போகாது. எனது கணவர் நிச்சயமாக திரும்பி வருவார். எனக்கு நம்பிக்கை உள்ளது.

எங்களுடைய மகன் இஷான் விமானி ஆக வேண்டும் என்பது தான் சுபாஷின் கனவு. அது நிச்சயம் நடக்கும். தேடுதல் பணி குறித்த தகவல் எங்களுக்கு வராத சமயத்தில், சுபாஷின் நண்பர்கள் எங்களை நேரில் சந்தித்து மிகவும் ஆறுதல் கூறி தார்மீக ஆதரவு தருகிறார்கள்.

அரசு எங்களுடன் ஒருங்கிணைந்து தகவல் அளிக்கிறார்கள். ஊடகத்துறையினரும் எங்களுடைய வாழ்க்கை கதையை மறந்துவிடக்கூடாது. தேடுதல் பணி குறித்து தொடர்ந்து ஒளிப்பரப்புங்கள். அப்போது தான் தேடும் பணி தீவிரமாக நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் தேடுதல் பணி குறித்த தகவல்களை விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தினர் தெரிந்துகொள்வதற்கு வசதியாக பாதுகாப்பு அமைச்சகம் ‘வாட்ஸ்-அப்’ கணக்கை தொடங்கி உள்ளனர்.

அதில், ஒவ்வொரு நாளும் நடைபெறும் தேடுதல் பணி குறித்த அனைத்து தகவல்களையும், விமானிகளின் குடும்பத்தினர் தெரிந்து கொள்ள அதில் பதிவேற்றம் செய்கிறார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply