இங்கிலாந்து பிரதமருடன் டீ சாப்பிடுவதற்காக தன் மகள்களுடன் லண்டன் வந்த மிஷல் ஒபாமா
அமெரிக்காவின் முதல் பெண்மணி என்று அழைக்கப்படும் ஒபாமாவின் மனைவி மிஷல்(51), தனது இரு மகள்களுடன் லண்டன் வந்துள்ளார். 2 நாள் பயணமாக அவர் இங்கிலாந்து வந்துள்ள அவர் இங்கிலாந்து பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெறும் தேனீர் விருந்தில் தனது மகள்களுடன் கலந்து கொண்டார். முன்னதாக மிஷலை வரவேற்ற இளவரசர் ஹேரி அவரை பிரதமர் டேவிட் கேமரூன், மற்றும் அவரது மனைவி சமந்தாவை சந்திப்பதற்காக டவுனிங் தெருவில் உள்ள கேமரூனின் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். வீட்டில் ஒபாமா குடும்பத்தினர் பிரதமரை சந்தித்தனர். அவர்களுக்கு தேனீர் விருந்தளித்து டேவிட் கேமரூன் கவுரவித்தார்.
நேற்று அவர்கள் டவர்ஹேம்லட்ஸில் உள்ள முல்பெர்ரி பள்ளிக்குச் சென்று பள்ளிக் குழந்தைகளைச் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது பெண் கல்விக்கான முக்கியத்துவம் குறித்து மிஷல் ஒபாமா பேசினார். மிஷலின் வருகையையொட்டி பெண் குழந்தைகள் ஜிம்னாஸ்டிக் உட்பட பல நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply