20 வர்த்தமானியில் வெளியிடப்பட்டாலும் ஐ.ம.சு.முவுக்கேற்ப நிறைவேற்றப்படும் : நிமல் சிறிபால டி சில்வா
20 வது திருத்த நகல் சட்டமூலம் எவ்வாறு வர்த்தமானியில் வெளியிடப் பட்டாலும் ஐ.ம.சு.மு.வுக்கு தேவை யானவாறே அதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். ஆனால் ஐ.தே.க. 20 வது திருத்தத்தை விட தேர்தலுக்கே முன்னுரிமை வழங்குவதாக குறிப்பிட்ட அவர் யதார்த்தமான தேர்தல் முறையொன்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் 20வது திருத்தம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,
19 வது திருத்தம் வர்த்த மானியில் வெளியிடப்பட்ட போதும் பாராளுமன்றத்தில் அது நிறைவேற்றப்படுகையில் பல திருத்தங்கள் செய்யப்பட்டன. வர்த்தமானியில் வெளியி டப்பட்டவாறே நிறைவேற்றப்படவில்லை. 20 வது திருத்தத்தையும் எமது நிலைப் பாட்டினடிப்படையில் திருத்தங்கள் செய்து நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம்.
எதிர்த்தரப்பிற்கே பெரும் பான்மை பலமிருக்கிறது. 20 வது திருத்தத்தை நிறைவேற்றும் உண்மையான நோக்கத்துடன் நாம் செயற்பட்டு வருகிறோம். மேலும் காலம் கடத்தாமல் 19 வது திருத்தத்தை போன்று 20 வது திருத்தத்தையும் நிறைவேற்ற இது உகந்த காலமாகும்.
இதனை நிறை வேற்றுவது கட்சிகளை விட மக்களுக்கே சாதகமானது. எனவே 20 வது திருத்தத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். 20 வது திருத்தம் குறித்த உச்ச நீதிமன்ற நிலைப்பாட்டை அறிய வேண்டும். ஐ.தே.க. இதனை நிறைவேற்றுவதை தடுத்து வருகிறது. ஆனால் எமது முழு அதிகாரத் தையும் சக்தியையும் பிரயோகித்து புதிய தேர்தல் முறையை கொண்டுவர நடவ டிக்கை எடுப்போம். 20 வது திருத்தத்திற்கு ஐ.தே.க.விலுள்ள பலர் ஆதரவாக உள்ளனர்.
225 ஆக உள்ள எம்.பி. தொகையை 237 ஆக அதிகரிக்க அமைச்சரவையில் ஆதரவு தெரிவித்த ஐ.தே.க. வெளியில் வந்து அதனை எதிர்க்கிறது. எம்.பி. தொகையை அதிகரிப்பதை நாமும் விரும்பவில்லை. ஐ.தே.க.வின் இரட்டை வேடம் புலனாகிறது.
சு.க. தலைமையில் அடுத்த அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் நாளை வேறு ஒருவரா பிரதமராவது என்பது பிரச்சி னையல்ல என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply