ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவத்தினர் இன்று வருகை
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக துணை ராணுவத்தின் 5 கம்பெனி படையினர் இன்று வருகின்றனர். இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பாதுகாப்பு பணிகளுக்காக 10 கம்பெனி துணை ராணுவத்தினர் (ஒரு கம்பெனிக்கு 100 வீரர்கள் வீதம்) அழைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 4 கம்பெனி, இந்திய-திபெத் எல்லை பாதுகாப்புப்படையைச் சேர்ந்த 4 கம்பெனி, மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த 2 கம்பெனி இதில் அடக்கம்.
முதல் கட்டமாக, எல்லை பாதுகாப்புப்படையை சேர்ந்த 4 கம்பெனி மற்றும் மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த ஒரு கம்பெனியும் பாதுகாப்பு பணிகளுக்காக இன்று (வியாழக்கிழமை) வருகின்றனர். மீதமுள்ள 5 கம்பெனி துணை ராணுவத்தினர் 23-ந் தேதி வருவார்கள்.
ஆர்.கே.நகரில் அனுமதியின்றி பிரசார விளம்பம் செய்ததாக இதுவரை 2 ஆயிரத்து 569 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உரிமம் பெற்ற 31 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டன. குற்ற விசாரணை முறை சட்டப்படி, 188 தடுப்புக்காவல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தலைமறைவாக இருந்த 86 குற்றவாளிகள் பிடிபட்டுள்ளனர். கண்காணிப்புக்காக ஆர்.கே.நகரில் ஆறு சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply