மாணவியின் படுகொலையை விசாரிக்க பயங்கரவாதச் சட்டம் எதற்கு? : சுரேஸ் எம்.பி

புங்குடுதீவு மாணவியின் படுகொலைக் குற்றவாளிகள் விரைந்து அதிஉச்ச தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டும் என்ற தமிழ் மக்களின் கோரிக்கையின் பெயரில், எமது மக்களினால் நிராகரிக்கப்பட்ட பயங்கரவாதச் சட்டத்தை அரசு கையில் எடுத்துள்ளமையை நாம் பார்த்துக் கொண்டிருப்பதா? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பினார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்த விவகாரம் நீதிமன்றத்தின் முன் இருந்தாலும் கூட அது தொடர்பான சட்டப் போக்குகள்,அந்த சட்டப் போக்குகளின் அரசியல் பரிமாணங்கள் ஆகியன குறித்து தமிழர்களின் அரசியல் தலைமைகள் ஒன்றுகூடி நுணுக்கமாக,நுட்பமாக ஆராய்ந்து,சில வெளிப்படுத்தல்களை செய்ய வேண்டிய தேவை எழுந்திருக்கின்றது.

தமிழ்ப் பேசும் மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட அவர்கள் மீது அநீதியான வகையில் கொடூரமான விதத்தில்,தென்னிலங்கை ஆட்சியாளர்களால் பலவந்தமாகத் திணிக்கப்பட்டு ,இந்த நாட்டில் வாழும் தமிழர்கள் மீது 37 ஆண்டுகளுக்கு மேலாக ஏவிவிடப்பட்டிருக்கும்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசு இந்த வழக்கில் கையில் எடுப்பதைப் பார்த்திருப்பதா? என்ற கேள்வி நம்மத்தியில் எழுந்திருக்கின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply