மஹிந்தவை நிராகரிக்க முடியாது : அவரே பிரதமர் வேட்பாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அடுத்த பிரதமர் வேட்பாளர். அவரைத்தவிர வேறு எவருக்கும் பிரதமராக முடியாது. ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட சுதந்திரக் கட்சிக் குழுவின் இறுதித் தீர்மானம் இதுவாகும், ஜனாதிபதியிடமும் இந்தக் கோரிக்கையை நாம் முன்வைக்கவுள்ளோம் என அக்குழுவின் உறுப்பினர், முன்னாள் அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க தெரிவித்தார்.மஹிந்தவை நிராகரித்து ஜனாதிபதி மைத்திரியால் பயணிக்கவே முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மஹிந்த ஆதரவுக் குழுவின் செய்தியாளர் சந்திப்பு நேற்று அபெயராம விகாரையில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply