சிறிய கட்சிகளை சந்திக்க எதிர்க்கட்சி தீர்மானம்

20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்கு முன்னர் சிறிய கட்சிகளைச் சந்திப்பதற்கு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற எதிர்க்கட்சி குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட் டுள்ளது. பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப் படுத்தும், பாராளுமன்றத்தை பிரதிநிதித்து வப்படுத்தாத சகல சிறிய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. சிறிய கட்சிக ளின் யோசனைகளையும் உள்ளடக்கிய திருத்தங்களை 20ஆவது திருத்தம் தொடர்பான குழுநிலை விவாதத்தில் முன்வைப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப் பட்டுள்ளது.

சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தேவை ஏற்பட்டிருப்பதா கவும் எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply