விட்டுக் கொடுப்புகளை பிழையாக அர்த்தப்படுத்தி கொள்ளக்கூடாது

குறுகிய அரசியல் நோக்கத்தோடு சிறு கட்சிகளையும் சிறுபான்மை மக்களின் பிரதிநித்துவத்தையும் பாதிக்கும் வகையில் கொண்டுவரப்படும் தேர்தல் திருத்தத்துக்கு ஆதரவளிக்க முடியாது என தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பி.திகாம்பரம் பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். தமது விட்டுக்கொடுப்புக்களை பிழையாக அர்த்தப்படுத்திக் கொள்ளாது வேண்டுகோள்களுக்கு செவிசாய்த்து 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ள ஒத்துழைக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார். 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

புதிதாக கொண்டுவரப்படும் அரசியல் அமைப்புத் திருத்தங்கள் நாட்டின் வாழும் பல்லின சமூகங்களையும் மாற்றுக் கருத்துக்களைக் கொண்ட குழுக்களையும் உள்வாங்கும் யோசனையைக் கொண் டிருக்கவேண்டுமே தவிர குறிப்பிட் சமூகமொன்றுக்கு தற்போதைக்கு இருக்கும் குறைந்த பட்ச உரிமைகளையும் இல்லாமல் செய்யும் ஏற்பாடாக இருத்தல் கூடாது.

கடந்த காலங்களில் இளைஞர்கள் மட் டத்தில் எழுந்த எழுச்சிகளை முறையாக உங்வாக்கி அவர்களுக்கு ஜனநாயக ரீதியில் நாம் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க மறுத்தபோது நாட்டில் அது பாரிய யுத்தத்திற்கு வழியமைத்ததை நாம் மறந்துவிடக்கூடாது.

முதலில் நான் பாராளுமன்ற உறுப் பினராக பிரதிநிதித்துவப்டபுத்தும் இந்திய வம்சாவளி மலையக தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் இந்த 20ஆவது திருத்தத்தில் என்னவாக இருக்கப்போகிறது என்பதை சபையில் அங்கம் வகிக்கும் சகல உறுப்பினர்களும் கட்சி, அரசியல் பேதம் மறந்து கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply