செவ்வாய் கிரகத்துக்கு பறக்க இருக்கும் சுனிதா வில்லியம்ஸ்

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கான நான்கு பேர் கொண்ட குழுவில் இந்திய வம்சாவளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் இடம் பெற்றுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப நான்கு வகையான திட்டங்களை உருவாக்கியுள்ள நாசா 2030-ம் ஆண்டிற்குள் செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை தரையிறக்க திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தின் முதல் கட்டமாக 2017 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் ராக்கெட்டை நாசா உருவாக்கி வருகிறது. இந்த சாதனை பயணத்திற்காக சுனிதா வில்லியம்ஸ், ராபர்ட், டக்லஸ் ஹர்லி ஆகியோரை தேர்வு செய்துள்ள நாசா அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கவுள்ளது.

இதுகுறித்து நாசா அதிகாரியான சார்லஸ் போல்டன் கூறுகையில், “ வர்த்தகரீதியிலான புதிய விண்கலனை உருவாக்கும் பணியில் இந்த நான்கு வீரர்களும் போயிங், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவார்கள்.” என்றார்.

1988-ம் ஆண்டு நாசாவின் விண்வெளி திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் 322 நாட்கள் விண்வெளியில் இருந்து அதிக நேரம் விண்வெளியில் இருந்த பெண் என்ற சாதனையை படைத்தார். தற்போது நாசாவால் தேர்வு செய்யப்பட்டதன் மூலம் அடுத்தபடியாக அவர் செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் முதல் விண்வெளி வீராங்கணை என்ற சாதனையை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply